இந்தியா

இனிமே என்னால அடி தாங்க முடியாது... மனைவிக்கு பயந்து பனைமரத்தில் குடியேறிய கணவன்

Published On 2022-08-30 17:51 IST   |   Update On 2022-08-30 17:51:00 IST
  • ராம் பிரவேஷ் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் தினம் தினம் சண்டை வந்துள்ளது.
  • மரத்தில் இருக்கும் சமயத்தில் உணவுப் பொருட்களை கயிற்றில் கட்டி அனுப்புகிறாகள்.

லக்னோ:

மனைவியின் அடியில் இருந்து தப்பிக்க கணவன் பனை மரத்தில் வீடு கட்டி குடியேறிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறி உள்ளது.

மாவ் மாவட்டத்தைச் சேர்ந்த ராம் பிரவேஷ் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் தினம் தினம் சண்டை வந்துள்ளது. மனைவிக்கு கோபம் தலைக்கேறினால் கடுமையாக தாக்கி உள்ளார். குடும்பம் என்றால் இதெல்லாம் சகஜம்தான் என ஆரம்பத்தில் கடந்து சென்ற ராம் பிரவேஷ், காலம் செல்லச் செல்ல அடி தாங்க முடியவில்லை. அதனால் வேறு வழியே இல்லை என்று முடிவெடுத்த அவர் மனைவிக்கு பயந்து பனை மரத்தின் மீது வீடு போன்ற அமைப்பை கட்டி வாழ்ந்து வருகிறார்.

பனை மர வீட்டில் அவர் இருக்கும் சமயத்தில் அவரது குடும்பத்தினர் உணவுப் பொருட்களை கயிற்றில் கட்டி அனுப்புகிறாகள். சுமார் ஒரு மாதமாக இவ்வாறு அவர் பனைமரத்தில் வாழ்ந்து வருகிறார்.

பிரவேஷை மரத்தில் இருந்து கீழே இறங்கும்படி கிராம மக்கள் வற்புறுத்திய போதிலும் அவர் இறங்கவில்லை. இறங்கும்படி கட்டாயப்படுத்தினால் அவர்கள் மீது கற்களை வீசி விரட்டியடித்துள்ளார். இதனால், கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீடியோ எடுத்தனர். இந்த பிரச்சினை குறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். 

Tags:    

Similar News