இந்தியா

பாகிஸ்தான் கொடியை வீட்டில் ஏற்றிய வியாபாரி கைது

Published On 2022-10-27 07:17 GMT   |   Update On 2022-10-27 07:17 GMT
  • முஸ்தாக் கான் தனது வீட்டில் பாகிஸ்தான் நாட்டு கொடியை ஏற்றி உள்ளார்
  • முஸ்தாக் கான் மீது தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பா.ஜனதாவினர் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராய்கர்:

சத்தீஸ்கர் மாநிலம் சரங்கர்-பிலைகர் மாவட்டம் அடல் சவுக் பகுதியை சேர்ந்தவர் முஸ்தாக் கான். இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் முஸ்தாக் கான் தனது வீட்டில் பாகிஸ்தான் நாட்டு கொடியை ஏற்றி உள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று நடவடிக்கை எடுத்து முஸ்தாக் கானை கைது செய்தனர்.

அவர் மீது 153 'ஏ' பிரிவின் கீழ் (மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்கள் இடையே பகைமையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதற்கு பாதகமான செயல்களை செய்தல்) வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அவரது வீட்டில் இருந்த பாகிஸ்தான் கொடியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அவர் மீது தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பா.ஜனதாவினர் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News