இந்தியா

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா: யானைகள் ஊர்வலம் வருகிற 24-ந்தேதி நடக்கிறது

Published On 2023-10-17 09:38 IST   |   Update On 2023-10-17 09:38:00 IST
  • காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தொடங்கிய தசரா விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
  • மைசூரு நகர் முழுவதும் சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மைசூரு தசரா விழா உலக புகழ்பெற்றது. மைசூரு தசரா விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இது 414-வது தசரா விழா ஆகும்.

மைசூரு சாமுண்டி மலையில் உள்ள காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தொடங்கிய தசரா விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

தசரா விழாவின் முக்கிய நிகழ்வான ஜம்பு சவாரி எனப்படும் யானைகள் ஊர்வலம் வருகிற 24-ந்தேதி நடைபெற உள்ளது. தசரா விழா தொடங்கி உள்ளதால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நகரில் எங்கு பார்த்தாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடங்கி உள்ளதால், மக்கள் கூட்டம் அதிமாக உள்ளது. அதே நேரத்தில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க மைசூரு நகர் முழுவதும் சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News