இந்தியா

நாய்குட்டியின் காது, வாலை அறுத்து உப்பு தடவி தின்ற வாலிபர்கள்- போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுகிறார்கள்

Published On 2022-12-15 10:57 IST   |   Update On 2022-12-15 10:57:00 IST
  • காது மற்றும் வால் அறுக்கப்பட்டதால் நாய் குட்டிகள் இரண்டு கதறி சத்தமிட்டன.
  • சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் பிராணிகள் நல வாரியத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.

பரேலி:

உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியில் அடிக்கடி விலங்குகளை கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் நடந்து வந்தன.

இந்த நிலையில் பரேலி பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் குடிபோதையில் 2 நாய் குட்டிகளின் காது மற்றும் வாலை அறுத்து கொடுமைப்படுத்தும் சம்பவம் பிராணிகள் நல வாரியத்தினரை பதற வைத்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர், தனது நண்பருடன் சேர்ந்து மது அருந்துகிறார். அப்போது அவர் அருகில் நின்ற 2 நாய் குட்டிகளையும் பிடித்து அதன் காதுகளை அறுக்கிறார். பின்னர் வாலையும் துண்டிக்கிறார்.

அதன்பின்பு அறுக்கப்பட்ட நாய்குட்டியின் காது மற்றும் வாலில் உப்பு தடவி அதனை மதுவில் தொட்டு சாப்பிடுகிறார்.

காது மற்றும் வால் அறுக்கப்பட்டதால் நாய் குட்டிகள் இரண்டு கதறி சத்தமிட்டன.

இது பற்றி அக்கம் பக்கத்தினர் பிராணிகள் நல வாரியத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நாய் குட்டிகளை மீட்டு கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசிலும் புகார் செய்தனர். போலீசார் நாய் குட்டிகளை கொடூரமாக சித்ரவதை செய்த வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News