இந்தியா

ராஜஸ்தானில் 2 லாரிகள் மோதி தீப்பிடித்தது- 3 பேர் பலி

Published On 2023-04-24 15:30 IST   |   Update On 2023-04-24 15:30:00 IST
  • லாரிகளில் பயணம் செய்த டிரைவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர்.
  • உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடியரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் பிசானேரியில் இருந்து சன்கோருக்கு டைல்ஸ் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. பார்மர் மாவட்டம் அல்புரா கிராமத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது எதிரே மற்றொரு லாரி வந்தது. எதிர்பாராதவிதமாக 2 லாரிகளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டது. மோதிய வேகத்தில் லாரிகள் தீப்பிடித்து எரிந்தது. இதில் அந்த லாரிகளில் பயணம் செய்த டிரைவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடியரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Tags:    

Similar News