குஜராத்தில் ரூ.4,400 கோடி மதிப்பில் திட்டப்பணிகள்- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
- பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு ஒருநாள் சுற்றுப்பயணமாக சென்றார்.
- நகர்ப்புற வளர்ச்சி துறை, குடிநீர் வடிகால் வாரிய துறை, சாலை மேம்பாட்டு துறை சார்பில் ரூ. 2,450 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு ஒருநாள் சுற்றுப்பயணமாக சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காந்தி நகரில் நடந்த விழாவில் ரூ. 4 ஆயிரத்து 400 கோடி மதிப்பில் மேற்கொள்ள இருக்கிற பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார். மேலும் அங்கு நடைபெற்று வரும் திட்டப்பணிகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நகர்ப்புற வளர்ச்சி துறை,குடிநீர் வடிகால் வாரிய துறை , சாலை மேம்பாட்டு துறை சார்பில் ரூ. 2,450 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் புதிதாக 19 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த வீடுகளுக்கான சாவிகளை பிரதமர் மோடி பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் அகமதாபாத்தில் நடந்த அகில இந்திய கல்வி மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.