இந்தியா

டெல்லி நட்சத்திர ஓட்டலில் ரூ.23 லட்சம் கட்டணம் செலுத்தாமல் தப்பிய மோசடி நபர் கைது

Published On 2023-01-22 06:12 GMT   |   Update On 2023-01-22 06:12 GMT
  • ஓட்டலில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள், வெள்ளி ஸ்பூன் ஆகியவற்றை திருடி சென்றார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபரை தேடி வந்தனர்.

புதுடெல்லி:

டெல்லியில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலுக்கு கடந்த ஆகஸ்டு மாதம் முகமது ஷெரீப் என்பவர் வந்து, தான் ஐக்கிய அரபு அமீரக அரச குடும்பத்தின் உதவியாளர் என்று கூறி அறையை எடுத்து தங்கினார்.

சுமார் 4 மாத காலம் ஓட்டலில் தங்கிய அவர் கடந்த நவம்பர் 20-ந்தேதி தகவல் தெரிவிக்காமல் ஓட்டலை விட்டு வெளியேறினார்.

ஆகஸ்டு 1-ந்தேதி முதல் நவம்பர் 20-ந்தேதி வரை தங்கிய அவர் ரூ.11.5 லட்சம் கட்டணம் செலுத்தி இருந்தார். பாக்கி தொகை ரூ.23 லட்சம் செலுத்த வேண்டிய நிலையில் அவர் மாயமானார். மேலும் ஓட்டலில் இருந்த விலை உயர்ந்த பொருட்கள், வெள்ளி ஸ்பூன் ஆகியவற்றை திருடி சென்றார்.

பின்னர் அவர் கொடுத்த ஆணங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்தினர் டெல்லி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி நபரை தேடி வந்தனர். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் முகமது ஷெரீப்பை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் தக்ஷின் கன்னடா பகுதியில் இருந்த அவரை போலீசார் பிடித்தனர். கைது செய்யப்பட்ட முகமது ஷெரீப்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News