இந்தியா

சர்வதேச ஆண்கள் தினம் இன்று...

Published On 2024-11-19 15:50 IST   |   Update On 2024-11-19 15:50:00 IST
  • இத்தினம் ஐ.நா.,வால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நாள் ஆண்களுக்கான நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

சர்வதேச ஆண்கள் தினம் 1999-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது. முதன்முதலில் கடந்த 1999-ல் தனது தந்தையின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் மேற்கிந்திய தீவுகள் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரான டாக்டர் ஜெரோம் டீலக்ஸிங் என்பவரால் நவம்பர் 19-ல் கொண்டாடப்பட்டது. சிறுவர்கள் மற்றும் ஆண்கள் தங்களை பாதிக்கும் பிரச்சனைகளை வெளிப்படுத்த தனது தந்தையின் பிறந்த நாளான நவம்பர் 19-ஐ ஆண்கள் தினமாக கொண்டாட மக்களை ஊக்குவித்தார்.

இதையடுத்து இத்தினம் இன்று இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன், சிங்கப்பூர், பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இத்தினம் ஐ.நா.,வால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தந்தைகளாக, சகோதரர்களாக, கணவர்களாக, சக ஊழியர்களாக சமுதாயத்தில் சாதனை படைத்து வரும் ஆண்களின் பங்களிப்பு மற்றும் சாதனையை போற்றும் வகையில் சர்வதேச ஆண்கள் தினம் (International Men's Day) அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் ஆண்களுக்கான நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

Similar News