இந்தியா
மும்பை விமான நிலையத்தில் ரூ.28 கோடி மதிப்புள்ள போதை பொருளுடன் வாலிபர் கைது
- மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணி ஒவரின் பேக்கை சோதனை செய்தனர்.
- மும்பையைச் சேர்ந்த அந்த பயணியை சுங்க அதிாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மும்பை:
மும்பை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணி ஒவரின் பேக்கை சோதனை செய்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பையின் உள் பகுதியை கிழித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது அந்த பையில் கோகைன் எனும் போதை பொருள் இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து பையில் இருந்த 2.81 கிலோ மதிப்புள்ள கோகைக்கனை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.28.10 கோடியாகும்.
இதை தொடர்ந்து மும்பையைச் சேர்ந்த அந்த பயணியை சுங்க அதிாரிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
சமூக வலைதளம் மூலம் அறிமுகமா நபர் ஒருவர் அந்த போதை பொருளை தன்னிடம் கொடுத்ததாக கைதான அந்த பயணி தெரிவித்தார்.
கடந்த வாரம் மும்பை சர்வதேச விமான நிலையத்தல் ரூ.47 கோடி மதிப்புள்ள கோகைன் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.