இந்தியா

டுவிட்டரில் வைரலான பிரியாணி சமோசா

Published On 2023-03-29 10:41 IST   |   Update On 2023-03-29 10:41:00 IST
  • டுவிட்டரில் ஒரு பயனாளர் பதிவிட்ட பிரியாணி சமோசா இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
  • குலோப் ஷாம் சமோசா அல்லது குரோமோசாவை விட பிரியாணி சமோசா அழகாக இருப்பதாக சிலர் பதிவிட்டு உள்ளனர்.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் பயனர்கள் பதிவிடும் வித்தியாசமான வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது. அதில் சிலர் தயாரித்து வெளியீடும் உணவு பொருட்களும் அடங்கும்.

அந்த வகையில் டுவிட்டரில் ஒரு பயனாளர் பதிவிட்ட பிரியாணி சமோசா இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் சமோசா ஒன்றில் சேர்க்கப்படும் மசாலாவுக்கு பதிலாக சிக்கன் பிரியாணியை திணித்து சமோசா தயாரிக்கும் காட்சிகள் உள்ளது.

இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்த நிலையில் சிலர் இந்த சமோசா தொடர்பாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதில் குலோப் ஷாம் சமோசா அல்லது குரோமோசாவை விட இந்த சமோசா அழகாக இருப்பதாக சிலர் பதிவிட்டு உள்ளனர். ஆனால் சில பயனாளர்கள் எதிர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News