இந்தியா

சண்டிகர் நிர்வாகம் விவகாரம்: மத்திய அரசின் முயற்சி கூட்டாட்சி மீதான தாக்குதல்- சுர்ஜிவாலா

Published On 2025-11-23 17:24 IST   |   Update On 2025-11-23 17:24:00 IST
  • மோடி அரசும் பாஜகவும் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு விரோதமாக நடந்து கொள்வது ஏன்?.
  • சகோதரத்துவத்துடன் இயங்கும் இரண்டு மாநிலங்களிடையே மோதலை உருவாக்கியுள்ளது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தின் தலைநகராக சண்டிகர் உள்ளது. சண்டிகர் நிர்வாகத்தை அரசியலமைப்பு சட்டப்பிரிவு 240-ன் கீழ் கொண்டு வரும் வகையில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருகிற 1-ந்தேதி பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதில் 10 மசோதாக்கள் கொண்டு வர இருக்கிறது. இதில் அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா 2025 ஒன்றாகும் என மக்களவை மற்றும் மாநிலங்களவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சண்டிகர் நிர்வாகம் தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியலமைப்பு 240 சட்டத்தின்படி, யூனியன் பிரதேசத்திற்கான விதிமுறைகளை உருவாக்கி நேரடியாக சட்டம் இயற்ற ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்யும். அதன்படி துணைநிலை ஆளுநரை நியமிக்க முடியும்.

இந்த முயற்சி சண்டிகர் மக்களின் அடையாளங்களை அழிப்பதற்கான முயற்சி என பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், "இது பஞ்சாபின் அடையாளம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைத் தாக்குகிறது என்றும் கூட்டாட்சி கட்டமைப்பைப் பிளவுபடுத்துகிறது. சண்டிகர் பஞ்சாபிற்குச் சொந்தமானது, அது பஞ்சாபுடனேயே இருக்கும்" என்றும் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, கூட்டாட்சி மீதான பழவீனப்படுத்தும் தாக்குதல் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் "1966 பஞ்சாப் மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் இரு மாநில தலைநகராக சண்டிகர் இருக்கும் நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில உரிமைகளின் மீதான தக்குதலாகும்.

கேள்வி என்னவென்றால், மோடி அரசும் பாஜகவும் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு விரோதமாக நடந்து கொள்வது ஏன்?. சகோதரத்துவத்துடன் இயங்கும் இரண்டு மாநிலங்களிடையே மோதலை உருவாக்கியுள்ளது. பக்ரா அணை அரியானா மாநிலத்தின் உரிமையாகும். ஆனால், பஞ்சாப் மாநில அரசு பாதுகாப்பிற்கான காவலாளர்கனை நிறுத்துவது மற்றும் கதவுகளை மூடுவது போன்ற உரிமையை பெற்றுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News