இந்தியா

விருதுக்கு தேர்வான நூல்கள்

தமிழ் எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு

Published On 2022-08-24 12:04 GMT   |   Update On 2022-08-24 12:05 GMT
  • தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
  • 'தனித்திருக்கும் அரளிகளின் மதியம்' என்ற கவிதை தொகுப்பிற்காக, காளிமுத்துவுக்கு விருது

இலக்கிய படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. நாவல், சிறுகதை, புனைவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் 2022ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகடாமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. யுவ புரஸ்கார விருது, எழுத்தாளர் காளிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'தனித்திருக்கும் அரளிகளின் மதியம்' என்ற கவிதை தொகுப்பிற்காக, காளிமுத்துவுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் குழந்தை இலக்கியப் பிரிவில் வழங்கப்படும் பால புரஸ்கார் விருது மல்லிகாவின் வீடு நூலுக்காக ஜி. மீனாட்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News