இந்தியா

முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் 52 கோடி மக்களுக்கு ரூ. 33 லட்சம் கோடி கடன்: மத்திய அமைச்சர்

Published On 2025-04-14 15:06 IST   |   Update On 2025-04-14 15:06:00 IST
  • பயனடைந்தவர்களில் 68 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள்.
  • 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாய் வரை வழக்கப்படுகிறது.

முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் 52 கோடி மக்களுக்கு தொழில் தொடங்குவதற்காக பிணையில்லாமல் 33 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதில் பயனடைந்தவர்களில் 68 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்த கடன் 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இன்று, இந்த உதவி மூலம் மக்கள் புதிய வியாபார முயற்சிகளை தொடங்குகின்றனர். அத்துட்ன நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு கட்டமைப்புகளுக்கான பட்ஜெட்டை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இது நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன" என்றார்.

Tags:    

Similar News