இந்தியா

நீடித்த மன அழுத்தம் புற்றுநோயை ஏற்படுத்தும்- உயிரிழந்த ராணுவ வீரர் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி

Published On 2025-10-07 04:15 IST   |   Update On 2025-10-07 04:15:00 IST
  • மத்திய அரசு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
  • சுலோச்சனா வர்மாவுக்கு அவரது மகன் இறந்த தேதியிலிருந்து சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்

பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம், புற்றுநோயால் இறந்த ஒரு ராணுவ அதிகாரியின் தாய்க்குச் சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்கிய உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.

அந்த ராணுவ அதிகாரி அரிய வகை புற்றுநோயால் ஜூன் 24, 2009 அன்று உயிரிழந்த நிலையில் திகாரியின் தாயார் சுலோச்சனா வர்மாவுக்குச் சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று சண்டிகர் ஆயுதப்படை தீர்ப்பாயம் 2019-ல் உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு அண்மையில் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹர்சிம்ரன் சிங் சேத்தி மற்றும் விகாஸ் சூரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், புகைபிடித்தல் போன்ற காரணங்களால் ஏற்படும் புற்றுநோயைத் தவிர, ராணுவ வீரர்களிடையே ஏற்படும் அனைத்து வகையான புற்றுநோய்களும் ராணுவ சேவையுடன் தொடர்புடையதாகவே கருதப்படும். பணியில் சேரும்போது ஆரோக்கியமாக இருந்த அதிகாரி, ஆறு ஆண்டுகள் ராணுவச் சேவையில் இருந்ததால் ஏற்பட்ட நீண்டகால மன அழுத்தமே புற்றுநோய்க்குக் காரணம்" என்று தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், சுலோச்சனா வர்மாவுக்கு அவரது மகன் இறந்த தேதியிலிருந்து சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பளித்தனர். 

Tags:    

Similar News