தோழியின் வீட்டில் 2 லட்சம் பணம், செல்போன் திருடிய காவல்துறை பெண் DSP.. வீடியோ வைரல்
- திருடியவற்றைத் திருப்பித் தருமாறு பிரமிளா கேட்டுள்ளார்.
- தலைமறைவான அவரைப் பிடிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மத்திய பிரதேச மாநிலத்தின் ஜஹாங்கிராபாதில் துணை காவல் ஆய்வாளராக (டிஎஸ்பி) பணிபுரிபவர் கல்பனா ரகுவன்ஷி (56).
கல்பனாவும், அவரது தோழியான பிரமிளா திவாரியும் நீண்டகால நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், செப்டம்பர் 24 ஆம் தேதியில் பிரமிளா வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது, அவரது வீட்டுக்குள் நுழைந்த கல்பனா, பிரமிளாவின் பணப்பையிருந்து ரூ. 2 லட்சம் பணத்தையும், மொபைல் போனையும் திருடியுள்ளார்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கல்பனாவின் கையில் பணத்தை எடுத்துச் செல்வது உறுதியானவுடன், திருடியவற்றைத் திருப்பித் தருமாறு பிரமிளா கேட்டுள்ளார். இருப்பினும், மொபைல் போனை மட்டும் கல்பனா கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, தனது மகளின் பள்ளிக் கட்டணத்துக்காக வைத்திருந்த பணத்தை திருடியதாக, கல்பனா மீது காவல் நிலையத்தில் பிரமிளா புகார் அளித்தார்.
சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக எகொண்டு, டிஎஸ்பி கல்பனா மீது போலீசார் திருட்டு வழக்கை பதிவு செய்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்து தலைமறைவான அவரைப் பிடிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கல்பனா திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.