இந்தியா

நிலச்சரிவு

மணிப்பூர் நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு

Published On 2022-07-02 00:48 GMT   |   Update On 2022-07-02 00:48 GMT
  • மோசமான வானிலையால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது.
  • நிலச்சரிவில் சிக்கி 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இம்பால்:

மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். துபுல் ரெயில் நிலையம் அருகே இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழுவினர் முழு வீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இதில் 15 பேர் ராணுவ வீரர்கள்.

மேலும் 40-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

நிலச்சரிவில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும். மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்படுகிறது என மணிப்பூர் முதல் மந்திரி பிரேன் சிங் தெரிவித்தார்.

Tags:    

Similar News