இந்தியா

கேரளாவில் சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 100 ஆண்டுகள் சிறை

Published On 2023-01-28 10:27 GMT   |   Update On 2023-01-28 10:27 GMT
  • போலீசார் விசாரணை நடத்தி பினுவை கைது செய்தனர்.
  • வழக்கை விசாரித்த நீதிபதி, பினுவுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே உள்ள பிரமாடம் பகுதியைச் சேர்ந்தவர் பினு (வயது 26).

இவர் கடந்த 2020-ம் ஆண்டு வீட்டில் இருந்து உள்ளார். அப்போது 15 வயது பழங்குடியின சிறுமி அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். அவரிடம் நைசாக பேச்சு கொடுத்த பினு, மிட்டாய் தருவதாக கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு வைத்து அவர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சென்றபோது தான் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பினுவை கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு பத்தனம்திட்டா மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, பினுவுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அபராதத்தொகை செலுத்த தவறினால் கூடுதலாக 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பலாத்கார வழக்கில் போக்சோ நீதிமன்றம் 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News