இந்தியா

2024-25 ஆண்டுக்கான நிதி பற்றாக்குறை 4.8% இலக்கை எட்டிய இந்தியா

Published On 2025-05-30 18:44 IST   |   Update On 2025-05-30 18:44:00 IST
  • 2024-25 நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி ரூ 3,30,68,145 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2024-2025ஆம் நிதியாண்டுக்கான செலவினம் 46.55 லட்சம் கோடி ரூபாய்.

2024-25ஆம் நிதியாண்டுக்கான இந்தியாவின் நிதி பற்றாக்குறை 4.8 சதவீதம் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்குள் அடங்கியதாக CGA (Controller General of Accounts) தெரிவித்துள்ளது.

முன்னதாக வெளியிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளின்படி, 2024-25 நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி ரூ.3,30,68,145 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ரூ.30.36 லட்சம் கோடி வருவாயை அல்லது திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீடுகளில் (RE) 98.3 சதவீதத்தை அரசால் வசூலிக்க முடிந்தது.

2024-2025ஆம் நிதியாண்டுக்கான செலவினம் 46.55 லட்சம் கோடி ரூபாய் அல்லது திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டின்படி 98.7 சதவீதம் ஆகும். 2023-24 நிதியாண்டில் நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.63 சதவீதம் ஆகும்.

முந்தைய நிதியாண்டில் நிதி பற்றாக்குறை ரூ.15,77,270 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த பிப்ரவரி மாதத்தில் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி நிதி பற்றாக்குறை 15,69,527 ரூபாயாக இருக்கும் என பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News