இந்தியா

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், மக்களவை முன்னாள் சபாநாயகருமான மனோகர் ஜோசி காலமானார்

Published On 2024-02-23 01:37 GMT   |   Update On 2024-02-23 02:22 GMT
  • வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 2002-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராக இருந்தார்.
  • 1995-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை மகாராஷ்டிர மாநில முதல்-மந்திரியாக பணியாற்றியுள்ளார்.

மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்-மந்திரி மனோகர் ஜோஷி. 86 வயதான இவர் மாரடைப்பு காரணமாக பி.டி. இந்துஜா மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை மோசமடைந்து இருப்பதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாகவும் நேற்று ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரிக்கப்படாத சிவசேனாவின் மூத்த தலைவராக விளங்கிய மனோகர் ஜோஷி கடந்த 1995-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை மகாராஷ்டிர மாநில முதல்-மந்திரியாக பணியாற்றியுள்ளார்.

பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர், வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 2002-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை மக்களவை சபாநாயகராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News