இந்தியா

தெலுங்கானா அமைச்சராகும் முன்னாள் கிரிக்கெட் வீரர்

Published On 2025-10-30 03:56 IST   |   Update On 2025-10-30 03:56:00 IST
  • ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
  • பிஆர்எஸ் வேட்பாளர் மாகாந்தி கோபிநாத்திடம் தோல்வியடைந்தார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் தலைவருமான முகமது அசாருதீன், தெலங்கானா மாநில அமைச்சரவையில் இடம்பெற உள்ளார்.

வரும் வெள்ளிக்கிழமை அன்று அசாருதீன் அமைச்சராகப் பதவியேற்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

நவம்பர் 11 அன்று ஐதராதாபாத் ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அசாருதீனை அமைச்சரவையில் சேர்க்க தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது.

இந்தத் தொகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ளதால் அசாருதீனை அமைச்சராக்குவது, இடைத்தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை கவரும் காங்கிரசின் வியூகம் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் அசாருதீன் சட்ட மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.

 2023 சட்டமன்றத் தேர்தலில் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் போட்டியிட்ட அசாருதீன், பிஆர்எஸ் வேட்பாளர் மாகாந்தி கோபிநாத்திடம் தோல்வியடைந்தார்.

பிஆர்எஸ் எம்எல்ஏ மாகாந்தி கோபிநாத் கடந்த ஜூன் மாதம் காலமானதால் அந்தத் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் நடக்கிறது.

தற்போது ஆளும் காங்கிரஸ் கட்சியில் ஒரு முஸ்லிம் எம்எல்ஏவோ அல்லது அமைச்சரோ இல்லை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

Similar News