இந்தியா

களமச்சேரி குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட டொமினிக் மார்ட்டினுக்கு 29-ந்தேதி வரை நீதிமன்ற காவல்

Published On 2023-11-16 10:41 IST   |   Update On 2023-11-16 10:41:00 IST
  • போலீசார் மட்டுமின்றி என்.ஐ.ஏ. அதிகாரிகளும் அவரிடம் விசாரணை நடத்தினர்.
  • டொமினிக் மார்ட்டினை போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சி களமச்சேரியில் கடந்தமாதம் 29-ந்தேதி கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 4 பெண்கள், 12 வயது சிறுமி என 5 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் கைது செய்யப்பட்டார். குண்டுவெடிப்பு சதியின் பின்னணி பற்றி கண்டறிவதற்காக போலீசார் மட்டுமின்றி என்.ஐ.ஏ. அதிகாரிகளும் அவரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் போலீசார் காவலில் எடுத்தும் விசாரித்து வந்தனர். கோர்ட்டு வழங்கிய போலீஸ் காவல் முடிவடைந்த தையடுத்து, டொமினிக் மார்ட்டினை போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து டொமினிக் மார்ட்டின் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News