பாஜக முட்டாள் கட்சி: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கடும் விமர்சனம்
- பாஜக-வும் சதமும் தூங்கும்போதும் கனவு காணும்போதும் கூட முஸ்லிம்களை மட்டுமே பார்க்கிறார்கள்.
- கடவுள் ராமர் பெயரை அவர்கள் உச்சரிப்பதில்லை. அதற்குப் பதிலாக தொடர்ந்து முஸ்லிம் என்ற வார்த்தையை உச்சரிக்கின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாஜக தலைவர் அமீத் சதம், மும்பையில் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சவந்த் பதில் அளிக்கையில் கூறியதாவது:-
மும்பையில் முஸ்லிம் மக்கள் தொகை உயர்ந்துள்ளதாக பாஜக தலைவர் அமீத் சதமின் குற்றச்சாட்டு, ஆராய்ச்சி மற்றும் புரிந்து கொள்ளும் ஆகிவற்றின் பலவீனம் கொண்ட நபரின் மனநிலை என்பதை பிரதிபலிக்கிறது. பாஜக-வும் சதமும் தூங்கும்போதும் கனவு காணும்போதும் கூட முஸ்லிம்களை மட்டுமே பார்க்கிறார்கள். கடவுள் ராமரை பெயரை அவர்கள் உச்சரிப்பதில்லை. அதற்குப் பதிலாக தொடர்ந்து முஸ்லிம் என்ற வார்த்தையை உச்சரிக்கின்றனர்.
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாதது போது, அவருக்கு இந்த புள்ளி விவரம் எங்கிருந்து கிடைத்தது?. வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் கூறினால், அதற்காகத் தேர்தல் ஆணையமும் பாஜகவும் தங்களைத் தாங்களே பாராட்டிக்கொள்கின்றன.
எந்தவொரு ஆய்வு இல்லாமலும், சரியான தகவல் இல்லாலும் பேசும் பாஜக, ஒரு முட்டாள் கட்சி. அவர்கள் வோட் ஜிகாத் என்ற வார்த்தையை பயன்படுத்துவன் மூலம் வாக்காளர்களை இழிவுப்படுத்துகின்றனர்.
இவ்வாறு சச்சின் சவந்த் தெரிவித்தார்.