இந்தியா

காஷ்மீரில் மத மோதலை உருவாக்க முயற்சி: 2 நகரங்களில் இணையதள சேவை துண்டிப்பு

Published On 2022-06-10 11:08 GMT   |   Update On 2022-06-10 11:08 GMT
  • பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரவாமல் இருக்க பதேர்வா மற்றும் கித்வார் நகரங்களில் இணைய தள சேவை இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
  • முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மத மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக வெளிமாநிலத்தவர்கள் மற்றும் இந்து பண்டிட் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது.

அவர்களை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்கி வருகிறாரகள். இதில் பள் ளி ஆசிரியை, வங்கி மேலாளர் உள்பட பலர் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்

இந்த நிலையில் அங்குள்ள பதேர்வா நகரில் உள்ள ஒரு மசூதியில் இருந்து மோதலை தூண்டும் வகையில் வீடியோ வெளியானது. சமுக வலை தளங்களில் இது வேகமாக பரவியதால். பதேர்வா நகரில் பதட்டமான சூழ்நிலை உருவானது. இது தொடர்பாக போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்தனர்

இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மத மோதல் ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் தோடா,கித்வார் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு உள்ளது. பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரவாமல் இருக்க பதேர்வா மற்றும் கித்வார் நகரங்களில் இணைய தள சேவை இணைப்புகள் அனைத்தும் துண்டிக்க்பட்டு உள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அமைதி நிலவுவதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக மத்திய மந்திரி ஜிஜேந்திரசிங் கூறும் போது மூத்த மத தலை வர்கள் ஒன்று கூடி பேசி அமைதியை கடைபிடிக்க வேண்டும் என வேண்டு கோள் விடுத்துள்ளார்.

சட்டம்-ஒழுங்கை சீர் குலைக்க யாராவது முயற்சி செய்தால் அவர்கள் மீ து கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News