இந்தியா

செகந்திராபாத்தில் திருப்பதி வந்தே பாரத் ரெயிலில் ஏற முயன்ற பெண்ணிடம் ரூ. 60 லட்சம் நகை கொள்ளை

Published On 2023-06-18 12:11 IST   |   Update On 2023-06-18 12:11:00 IST
  • மர்ம நபர் 4-வது நுழைவுவாயில் வழியாக தப்பி சென்றுவிட்டார்.
  • போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரவந்தி. இவர் அந்த மாநில அரசு சமூக நலத்துறையில் பணியாற்றி வருகிறார். நேற்று செகந்திராபாத்திலிருந்து திருப்பதி செல்வதற்கு புறப்பட்டு வந்தார்.

செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் 1-ல் அவர் திருப்பதி செல்லும் வந்தே பாரத் ரெயிலுக்காக காத்திருந்தார்.

வந்தே பாரத் ரெயில் வந்து நின்றதும் அதில் இருந்து ஏராளமான பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர்.

ஸ்ரவந்தி கூட்டத்திற்கு நடுவே ரெயிலில் ஏற முயன்றார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவர் வைத்திருந்த பையை பறித்துக் கொண்டு ஓடினார்.

இதனால் அதிர்ச்சடைந்த ஸ்ரவந்தி அலறி கூச்சலிட்டார்.

அதற்குள் மர்ம நபர் 4-வது நுழைவுவாயில் வழியாக தப்பி சென்று விட்டார்.

ஸ்ரவந்தி வைத்திருந்த பையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை போனது.

இதுகுறித்த செகந்திராபாத் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.

அதில் தனது பையில் வைத்திருந்த வைர நெக்லஸ் உட்பட ரூ.60 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனதாக தெரிவித்துள்ளார்.

போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். ரெயில்களில் ஏறும்போது பயணிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News