இந்தியா

புத்த மதத்தலைவர் தலாய் லாமாவுக்கு லடாக் அரசின் விருது

Published On 2022-08-07 03:44 GMT   |   Update On 2022-08-07 03:44 GMT
  • சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த அவர் மேற்கொண்ட பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
  • தலாய்லாமா கடந்த மாதம் 15-ந்தேதி முதல் லடாக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

லே :

சிறந்த பிரபலங்களுக்கு லடாக்கின் தன்னாட்சி மலைப்பிராந்திய மேம்பாட்டு கவுன்சில் சார்பில் உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த அமைப்பின் 6-வது விருது திபெத் புத்த மதத்தலைவர் தலாய்லாமாவுக்கு நேற்று வழங்கப்பட்டது.

மனிதாபிமான செயல்கள் குறிப்பாக லடாக் யூனியன் பிரதேசத்தில் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்த அவர் மேற்கொண்டு வரும் சிறப்பான பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது.

லடாக் மற்றும் திபெத் ஆகிய பிரதேசங்கள் மத மற்றும் கலாசார ஒற்றுமைகளுடன் வலிமை மிக்க சிந்து நதியால் இணைக்கப்பட்டுள்ளதாக இந்த அமைப்பின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். தலாய்லாமா கடந்த மாதம் 15-ந்தேதி முதல் லடாக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News