இந்தியா
ஆந்திராவில் ஒரே கிராமத்தில் 60 இரட்டை குழந்தைகள்- ஒரே பள்ளியில் படிக்கும் ஆச்சரியம்
- கணக்கெடுப்பில் அந்த கிராமத்தில் ஏராளமான இரட்டையர்கள் இருப்பது தெரியவந்தது.
- இரட்டைக் குழந்தைகள் அதிக அளவில் உள்ளதால் தொட்டி குண்டா கிராமம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ரங்கம்பேட்டை அருகே தொட்டி குண்டா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 1995-ம் ஆண்டு முதல் இரட்டை குழந்தைகள் பிறந்து வருகின்றன.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஆசிரியர் சீனிவாஸ் என்பவர் வீடு வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினார்.
கணக்கெடுப்பில் அந்த கிராமத்தில் ஏராளமான இரட்டையர்கள் இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் கணக்கெடுப்பு நடத்திய ஆசிரியரின் மனைவிக்கும் இரட்டைக் குழந்தை பிறந்தது.
தற்போது ரங்கம்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் தொட்டி குண்டாவை சேர்ந்த 60 இரட்டை குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இரட்டைக் குழந்தைகள் அதிக அளவில் உள்ளதால் தொட்டி குண்டா கிராமம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மாநிலம் முழுவதும் பிரபலமாகி உள்ளது.