கோழிக்கோட்டில் மீண்டும் பரவும் அமீபிக் மூளைக்காய்ச்சல்: 3 மாத குழந்தை-வாலிபர் பாதிப்பு
- இருவருக்கும் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
- பல மாதிரிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரித்து சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் அமீபிக் மூளைக்காய்ச்சல் மீண்டும் பரவ தொடங்கி உள்ளது. இந்த காய்ச்சலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 4-ம் வகுப்பு படித்துவந்த தாமரச்சேரி பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி பரிதாபமாக இறந்தாள்.
இந்தநிலையில் ஓமசேரியை சேர்ந்த 3 மாத குழந்தை மற்றும் அன்னசேரியை சேர்ந்த வாலிபர் ஆகிய இருவருக்கும் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.
அவர்கள் இருவரும் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் பாதிப்பு என்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவர்கள் இருவருக்கும் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வாலிபர் மற்றும் குழந்தை வீடுகளில் உள்ள கிணற்றுநீர் உள்ளிட்ட பல மாதிரிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் சேகரித்து சோதனை நடத்தி வருகின்றனர்.