செய்திகள்
கோப்புப்படம்

தனியார் இயக்கும் ‘பாரத் கவுரவ்’ சுற்றுலா ரெயில்: 190 ரெயில்கள் ஒதுக்கப்பட்டதாக அமைச்சர் தகவல்

Published On 2021-11-23 16:59 IST   |   Update On 2021-11-23 18:16:00 IST
தனியார் நிறுவனங்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இயக்கும் வகையில் பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்திய ரெயில்வே துறை பயணிகளுக்கான ரெயில்களை இயக்கி வருகிறது. தனியார் நிறுவனங்களிடம் சில ரெயில்களை ஒப்படைக்க ஆலோசித்து வருகிறது. இதற்கிடையே ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் சுற்றுலா ரெயில்களை இயக்கி வருகிறது. 

அந்த வகையில் பாரத் கவுரவ் என்ற பெயரில் ரெயில்களை இயக்க ரெயில்வேதுறை முடிவு செய்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வினியோகம் செய்யப்படுகிறது என மத்திய ரெயில்வே துறைஅமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.



இதற்காக 190 ரெயில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் 3,033 பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ள ரெயில்வேதுறை, ரெயில்களில் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் உணவு வழங்கும் முறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
Tags:    

Similar News