செய்திகள்
அருங்காட்சியகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி

பிர்சா முண்டா நினைவு அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் மோடி

Published On 2021-11-15 12:17 IST   |   Update On 2021-11-15 12:17:00 IST
பிர்சா முண்டாவின் பிறந்த நாளான இன்று தனக்கு தனிப்பட்ட முறையில் உணர்வுப்பூர்வமான நாள் என்று பிரதமர் மோடி பேசினார்.
ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ராஞ்சியில் பிர்சா முண்டாவின் நினைவு அருங்காட்சியகம் திறக்கப்படடது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று, அருங்காட்சிகத்தை திறந்து வைத்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, பிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15 ஆம் தேதி ஜன்ஜாதிய கவுரவ் தினமாக கொண்டாடப்படுகிறது என்றார்.

‘பழங்குடி சகோதர சகோதரிகள் மற்றும் குழந்தைகளுடன் எனது வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்துள்ளேன். அவர்களின் இன்ப துன்பங்களுக்கும், அன்றாட வாழ்க்கைக்கும், அவர்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கும் நான் சாட்சியாக இருந்தேன். எனவே, இன்று எனக்கு தனிப்பட்ட முறையில் உணர்வுப்பூர்வமான நாள்’ என்றும் மோடி குறிப்பிட்டார்.

விழாவில் முதல்வர் ஹேமந்த் சோரன், மத்திய மந்திரி அர்ஜுன் முண்டா, முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News