செய்திகள்
விவேக் ராம் சவுத்திரி

இந்திய விமான படைக்கு விவேக் ராம் சவுத்திரி புதிய தளபதி

Published On 2021-09-22 09:57 GMT   |   Update On 2021-09-22 09:57 GMT
இந்திய விமான படைக்கு புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஏர்மார்‌ஷல் விவேக் ராம் சவுத்திரி மிக் -29 விமானத்தை இயக்குவதில் வல்லவர்.
புதுடெல்லி:

இந்திய விமானப் படையின் தளபதியாக இருக்கும் ஆர்.கே.எஸ். பதூரியா வருகிற 30-ந் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார்.

இதனால் புதிய தளபதியாக ஏர்மார்‌ஷல் விவேக் ராம் சவுத்திரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது விமானப் படையின் துணை தளபதியாக இருந்து வருகிறார்.

விவேக் ராம் சவுத்திரி 1982-ல் விமானப் படையில் சேர்ந்தார். அதன் பிறகு பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்தார். மிக் -29 விமானத்தை இயக்குவதில் வல்லவர். இதுவரை 3,800 மணிநேரம் போர் விமானத்தை இயக்கி இருக்கிறார்.

விமானப் படையின் மேற்கு பிரிவு தளபதியாகவும் இருந்துள்ளார். அவர் பரமவசிஷ்டசேவா விருது, ஆதிவசிஷ்டசேவா விருது, வாயுசேனா விருது போன்ற பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

பதவி ஓய்வு பெறும் விமானப் படை தளபதி பதூரியா கடந்த 2019 செப்டம்பர் 9-ந் தேதி தளபதி பொறுப்பை ஏற்றார். 2 ஆண்டுகளுக்குள் அவர் பதவி ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News