செய்திகள்
கோப்புப்படம்

மேற்கு வங்காளத்தில் 28 சதவீத மந்திரிகள் மீது குற்ற வழக்குகள் - ஆய்வில் தகவல்

Published On 2021-05-12 23:38 GMT   |   Update On 2021-05-12 23:38 GMT
மேற்கு வங்காளத்தில் புதிதாக அமைந்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்பட 44 மந்திரிகள் உள்ளனர்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் புதிதாக அமைந்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்பட 44 மந்திரிகள் உள்ளனர். இதில் அமித் மித்ரா தவிர மீதமுள்ள 43 மந்திரிகளின் பின்னணி குறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு ஆய்வு செய்தது.

இதில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி மந்திரிகளில் 28 சதவீதத்தினர் (12 பேர்) மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 16 சதவீதம் பேர் மீது கடுமையான வழக்குகள் இருக்கின்றன.

32 மந்திரிகள் (74 சதவீதம்) கோடீஸ்வரர்கள். மிகவும் பணக்கார மந்திரியாக கருதப்படும் அகமது ஜாவேத் கானின் சொத்து மதிப்பு ரூ.32.33 கோடி. குறைவான சொத்துகளை கொண்ட பிர்பகா ஹன்ஸ்டாவுக்கு ரூ.3.06 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளன. 43 மந்திரிகளின் சராசரி சொத்து மதிப்பு ரூ.4.29 கோடி ஆகும்.

10 மந்திரிகள் 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான கல்வித்தகுதி கொண்டவர்கள். 32 பேர் பட்டப்படிப்பு படித்தவர்கள். ஒருவர் டிப்ளமோ பெற்றுள்ளார். புதிய மந்திரி சபையில் 9 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News