மைசூரு மாவட்ட கலெக்டராக இருக்கும் ரோகிணி சிந்தூரி தனது குடும்பத்தினருடன் சொந்த காரில் வெளியே சென்ற போது காரின் டயர் பஞ்சராகி உள்ளது. தானே கார் டயரை கழற்றி மாட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த சமயத்தில் அங்கு வந்த ஒருவர், பெண் ஒருவர் தானே கார் டயரை கழற்றி மாட்டியதை பார்த்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அருகில் சென்று விசாரித்தார். அப்போது முகக்கவசத்தை அகற்றிய கலெக்டர் ரோகிணி சிந்தூரி அவரிடம் பேசியுள்ளார். அப்போது தான் கார் டயரை கழற்றி மாட்டியவர் கலெக்டர் ரோகிணி சிந்தூரி என்பது அந்த நபருக்கு தெரியவந்தது.
உடனே அவர் கலெக்டர் தானே நீங்கள் என கேட்டார். அதற்கு கலெக்டர் புன்னகையை உதிர்த்துவிட்டு புறப்பட்டு சென்றார். தற்போது இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்ட கலெக்டரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.