செய்திகள்
சாலை விபத்து

ஆந்திராவில் லாரி மீது கார் மோதி 4 பேர் பலி

Published On 2021-01-08 02:28 IST   |   Update On 2021-01-08 02:28:00 IST
ஆந்திராவில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
விஜயவாடா:

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து நேற்று கார் ஒன்று அங்குள்ள ஏலுரு நோக்கி சென்று கொண்டிருந்தது.

அந்த கார் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மார்தூர் பகுதியில் வேகமாக சென்ற போது, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

அவர்கள் அனைவரும் ஏலுரு பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

Similar News