செய்திகள்
ஏர் இந்தியா விமானம்

பாகிஸ்தான் வான்வழியாக ஏர் இந்தியா விமானங்கள் டெல்லி வந்தடைந்தன

Published On 2019-07-16 15:12 GMT   |   Update On 2019-07-16 15:12 GMT
சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பாகிஸ்தான் வான்வழியாக பறந்து தலைநகர் டெல்லியை 2 விமானங்கள் அடைந்துள்ளன என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை பாலக்கோட் தாக்குதல் நடத்தியது. 
 
இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக தனது வான்வழியை இந்திய விமானங்கள் பயன்படுத்த பாகிஸ்தான் தடை விதித்தது. 

கிரிகிஸ்தானில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு  மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க சென்றபோது, பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த இயலாத காரணத்தால் மாற்று வழியைத் தேர்வு செய்ய நேர்ந்தது. 

இதற்கிடையே, கர்த்தார்பூர்-குருத்வாரா ஆகிய இடங்களுக்கு இடையே வான்வழியை திறந்து விடுவது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே  உடன்பாடு ஏற்பட்டிருந்த சூழலில், தனது வான்வழியையும் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் திறந்துவிட்டது.

இந்நிலையில், சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பாகிஸ்தான் வான்வழியாக பறந்து தலைநகர் டெல்லியை 2 விமானங்கள் அடைந்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தான் வழியாக விமானங்கள் வந்து செல்வதால் சுமார் 20 லட்சம் ரூபாய் மிச்சமாகும் என ஏர் இந்தியா 
தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News