செய்திகள்
முகுல் ராய்

மேற்கு வங்காளத்தில் 107 எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு தாவ திட்டம்?

Published On 2019-07-13 12:10 GMT   |   Update On 2019-07-13 12:10 GMT
மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா:

கர்நாடகம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும் பகுதியினர் சமீபத்தில் ராஜினாமா செய்தும், பாஜகவில் இணைந்தும் அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளனர்.

இந்நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், மா.கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தெரியவந்துள்ளது.

பாஜகவில் சேர விருப்பம் தெரிவித்துள்ள இந்த எம்.எல்.ஏ.க்களின் பெயர் பட்டியல் என்னிடம் உள்ளது என மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த முகுல் ராய் குறிப்பிட்டுள்ளார்.

கொல்கத்தா நகரில் செய்தியாளர்களிடம் இந்த தகவலை இன்று தெரிவித்த முகுல் ராய், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசில் ரெயில்வே மந்திரியாக முன்னர் பதவி வகித்தவர் என்பது நினைவிருக்கலாம்.
Tags:    

Similar News