செய்திகள்

கேரளாவில் வாக்களிக்க சென்ற 2 முதியவர்கள் சுருண்டு விழுந்து மரணம்

Published On 2019-04-23 10:25 GMT   |   Update On 2019-04-23 11:22 GMT
கேரளா மாநிலத்தில் இன்று நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த 2 முதியவர்கள் சுருண்டு விழுந்து மரணம் அடைந்தனர். #LokSabhaElections2019
திருவனந்தபுரம்:

பாராளுமன்ற தேர்தலின் மூன்றாவது கட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்களது வாக்கினை பதிவுசெய்து வருகின்றனர். 

இந்நிலையில், கேரளா மாநிலத்தில் இன்று நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த இரு முதியவர்கள் சுருண்டு விழுந்து மரணம் அடைந்தனர். 

கேரளா மாநிலம் வடகரா தொகுதியில் விஜயி (65), என்ற மூதாட்டி சுருண்டு விழுந்து இறந்தார்.

இதேபோல், வடசேரிக்கரா தொகுதியில் பாப்பச்சன் (80), என்ற முதியவர் வாக்களிக்கும் இடத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். மேலும், இதே தொகுதியில் வேணுகோபால மரார் (72), என்ற முதியவரும் மயக்கமடைந்தார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். #LokSabhaElections2019
Tags:    

Similar News