செய்திகள்
கோப்பு படம்

மியான்மரில் இருந்து ரூ.80 கோடி ஹெராயின் கடத்திவந்த 6 பேர் கைது

Published On 2019-01-21 14:23 IST   |   Update On 2019-01-21 14:23:00 IST
மியான்மர் நாட்டில் இருந்து மணிப்பூர் மாநிலம் வழியாக ரூ.80 கோடி மதிப்பிலான ஹெராயினை கடத்திவந்த 6 பேரை டெல்லி சிறப்புப்படை போலீசார் கைது செய்தனர். #Delhipolice #heroinsmuggling #Rs80croreheroin
புதுடெல்லி:

இந்தியாவின் அண்டைநாடுகளான பூடான், நேபாளம், மியான்மர், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஹெராயின், பிரவுன் ஷுகர் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்திவரும் சில பெரும்புள்ளிகள் இடைத்தரகர்கள் மூலமாக நமது நாட்டின் பல பகுதிகளில் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

அவ்வகையில், மியான்மர் நாட்டில் இருந்து மணிப்பூர் மாநிலம் வழியாக 20 கிலோ ஹெராயின் கடத்திவந்த 6 பேரை டெல்லி சிறப்புப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய் என தெரிவித்துள்ள அதிகாரிகள் கைதான நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #Delhipolice #heroinsmuggling #Rs80croreheroin
Tags:    

Similar News