செய்திகள்

பஞ்சாப் குண்டுவெடிப்பு - துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும்

Published On 2018-11-19 05:52 GMT   |   Update On 2018-11-19 05:52 GMT
பஞ்சாப் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுப்போருக்கு 50 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். #AmritsarBlast
சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் நேற்று மதபோதனை நிகழ்ச்சி நடைபெற்றபோது பைக்கில் வந்த மர்மநபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில், மதபோதகர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டு வீசி தாக்குதல் நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



இந்த தாக்குதலில் தொடர்புடைய நபர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் 50 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் இன்று அறிவித்துள்ளார். பஞ்சாப் போலீஸ் ஹெல்ப்லைன் 181-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும், தகவல் கொடுப்பவர்களின் பெயர் மற்றும் அவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தாக்குதல் நடந்த பகுதியில் முதல்வர் இன்று நேரில் பார்வையிட உள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். #AmritsarBlast

Tags:    

Similar News