செய்திகள்

பாஜகவுக்கு எதிராக டெல்லியில் 22ம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டம் - சந்திரபாபு நாயுடு

Published On 2018-11-10 16:27 GMT   |   Update On 2018-11-10 16:27 GMT
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைத்து வரும் சந்திரபாபு நாயுடு, வரும் 22ம் தேதி டெல்லியில் கூட்டம் நடத்தப்பட உள்ளது என தெரிவித்தார். #ChandrababuNaidu #NonBJPParties
ஐதராபாத்:

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை எனக்கூறி பாஜக கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு விலகினார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக்அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரையும் சந்தித்தார்.



மேலும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஆம் ஆத்மிதலைவர் கெஜ்ரிவால், சரத்யாதவ், முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவே கவுடா, கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டம் நடத்த சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். அதன்படி, இந்த அனைத்துக்கட்சிகளின் கூட்டம் வரும் 22-ம் தேதி டெல்லியில் உள்ள ஆந்திரப்பிரதேசம் பவனில் நடத்தப்படும். இந்த கூட்டத்தில அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். #ChandrababuNaidu #NonBJPParties
Tags:    

Similar News