செய்திகள்

சமாஜ்வாதி கட்சியில் ஓரங்கட்டப்பட்ட ஷிவ்பால் யாதவ் புதிய கட்சி தொடங்குகிறார்

Published On 2018-08-29 08:55 GMT   |   Update On 2018-08-29 09:31 GMT
முலாயம்சிங் யாதவ் தம்பியும் சமாஜ்வாதி கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஷிவ்பால் யாதவ் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார். கட்சிக்கு மதசார்பற்ற சமாஜ்வாதி மோர்ச்சா என பெயர் சூட்ட திட்டமிட்டுள்ளார். #ShivpalYadav
லக்னோ:

சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவின் தம்பி ஷிவ்பால் யாதவ். முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் கட்சியின் தலைமை பொறுப்புக்கு வந்த பின்னர், கட்சியில் இருந்து ஷிவ்பால் யாதவ் ஓரங்கட்டப்பட்டார்.



அதைத் தொடர்ந்து அகிலேஷ் யாதவுக்கும், அவரது சித்தப்பாவான ஷிவ்பால் யாதவுக்கும் இடையே கடும் பனிப்போர் நடைபெற்று வந்தது. கட்சியிலும், குடும்பத்திலும் பிரச்சினை எழுந்தது.

இந்த நிலையில் ஷிவ்பால் யாதவ் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார். அதற்கு மதசார்பற்ற சமாஜ்வாதி மோர்ச்சா என பெயர் சூட்ட திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, “கட்சியில் எனக்கு எந்த பணியும் வழங்கப்படவில்லை. எனவே “மதசார்பற்ற சமாஜ்வாதி மோர்ச்சா” என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க இருக்கிறேன்.

சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என நீண்ட காலமாக விரும்பினேன். கட்சியில் இருந்து ஒதுங்கி இருப்பவர்களை வரவேற்கிறேன்” என்றார்.

அவரது இந்த அறிவிப்பால் சமாஜ்வாதி கட்சி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சியின் அதிருப்தியாளர்கள் ஷிவ்பால் யாதவ் கட்சியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #ShivpalYadav
Tags:    

Similar News