செய்திகள்
லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட விஷ்ணுபிரியா, விஷ்ணுதாஸ் மற்றும் அவரது தாய் ஜெயா.

கேரள வெள்ள நிவாரணத்திற்கு லாட்டரி சீட்டை விற்பனை செய்த அக்காள்-தம்பி

Published On 2018-08-12 10:23 GMT   |   Update On 2018-08-12 10:23 GMT
கேரள வெள்ள நிவாரணத்திற்காக லாட்டரி சீட்டை விற்பனை செய்த அக்காள், தம்பி அந்த பணத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும்படி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். #KeralaRain #KeralaFloods
கொழிஞ்சாம்பாறை:

கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத பேய் மழை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஆயிரக்கணக்கானோர் வீடு இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் திருச்சூர் கொடக்கரையை சேர்ந்த ஜெயா-சுனில் தம்பதியின் மகள் விஷ்ணுபிரியா, மகன் விஷ்ணுதாஸ் ஆகியோர் வெள்ள நிவாரண நிதி வழங்க லாட்டரி விற்பனையில் ஈடுபட்டனர்.

அப்போது நிவாரணம் வழங்க லாட்டரி விற்பனை செய்கிறோம். லாட்டரி வாங்குங்கள் என்று கூவி கூவி விற்பனை செய்தனர். காலை முதல் மாலை வரை விற்பனை செய்த பணத்தில் 2 மூட்டை அரிசி, காய்கறிகள் மற்றும் ரூ.2 ஆயிரம் பணத்தை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும்படி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அக்காள்-தம்பியின் இந்த செயல் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #KeralaRain #KeralaFloods



Tags:    

Similar News