செய்திகள்

சத்திஸ்கரில் 14 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

Published On 2018-08-06 08:43 GMT   |   Update On 2018-08-06 08:43 GMT
சத்திஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் இன்று சிறப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் நக்சலைட் இயக்கத்தை சேர்ந்த 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். #ChhattisgarhEncounter
ராய்ப்பூர்:

மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.

பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்திஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக இந்தோ-திபெத்திய எல்லைப்படை மற்றும்  மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.

இந்நிலையில், சத்திஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே இன்று காலை கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 14 நக்சலைட்டுகளை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து தேடுல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். #ChhattisgarhEncounter
Tags:    

Similar News