செய்திகள்

ஜீவனாம்சத்தை சில்லரையாக வழங்கிய முன்னாள் கணவர் - கோர்ட்டில் கொந்தளித்த பெண்

Published On 2018-07-25 11:43 GMT   |   Update On 2018-07-25 11:43 GMT
இரண்டு மாதங்களாக ஜீவனாம்சம் வழங்காத நிலையில் முன்னாள் மனைவி கோர்ட்டை நாடிய நிலையில், 24600 ரூபாயை முன்னாள் கனவர் சில்லரைகளாக வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.
சண்டிகர்:

அரியானா ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றுபவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். மனைவிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இரு மாதங்களாக ஜீவனாம்சம் வழங்காததால் அந்த பெண் கோர்ட்டை நாட,  2 மாதத்துக்கான ஜீவனாம்சத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மாவட்ட கோர்ட் உத்தரவிட்டது. 

இதையடுத்து அந்த வக்கீல் ரூ.24,600 ரூபாயை சில்லரையாகவும், மீதமுள்ள 400 ரூபாயை நூறு ரூபாய் நோட்டாகவும் மூட்டையில் கட்டி நீதிமன்றத்துக்கு வந்து மனைவியிடம் வழங்கினார். அதை ஏற்க அவரது மனைவி மறுத்து விட்டார். தனக்கு அவசரமாக பணம் தேவைப்படும் நிலையில் இப்படி சில்லரையாக தருவதும் ஒரு வகையில் கொடுமைதான், சில்லரையை வங்கியில் வாங்க மறுக்கிறார்கள் என முறையிட்டார்.

‘ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்பது தான் உத்தரவு. நோட்டாகதான் கொடுக்க வேண்டும் என்பது உத்தரவல்ல’ என வக்கீல் சட்டம் பேச வாக்குவாதம் வெடித்துள்ளது. பின்னர் ,அந்த வழக்கறிஞர் சில்லரைகளை எனது ஜூனியர்களை விட்டு எண்ணித் தரச்சொல்கிறேன் என்றும் அதை ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருவதாகவும் உறுதியளித்தார். இதனை அடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News