செய்திகள்

ராஜஸ்தானில் 59 வயதில் பி.ஏ. படிக்கும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.

Published On 2018-07-23 04:08 IST   |   Update On 2018-07-23 04:08:00 IST
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட பா.ஜனதாவை சேர்ந்த பூல் சிங் மீனா தனது 59 வயதில் பி.ஏ. படித்து வருகிறார். #PhoolSinghMeena #BJP
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் பா.ஜனதாவை சேர்ந்த பூல் சிங் மீனா (வயது 59).

இவர் சிறுவயதில் தன்னுடைய தந்தையை இழந்ததால் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு விவசாய தொழிலுக்கு சென்றுவிட்டார்.

இதன் காரணமாக தன்னுடைய தொகுதியில் உள்ள அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கூடங்களில் சேர அவர்களை ஊக்குவித்து வருகிறார்.

அந்த வகையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெரும் மாணவிகள் இலவச விமான பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளார்.

இப்படி தன்னுடைய தொகுதியில் அனைவருக்கும் கல்வி என்கிற நோக்கில் நலத்திட்ட உதவிகளை முன்னெடுத்து வரும் பூல் சிங் மீனாவுக்கு தான் கல்வி கற்கவில்லை என்ற வருத்தம் நீண்ட காலமாக இருந்து வந்தது. #PhoolSinghMeena #BJP #Tamilnews

Tags:    

Similar News