செய்திகள்

3 லட்சம் கோடி சொத்து- ஆசிய பணக்காரர்களில் முகேஷ் அம்பானி முதலிடம்

Published On 2018-07-14 13:35 IST   |   Update On 2018-07-14 13:35:00 IST
பல்வேறு தொழில்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி ஆசிய பணக்காரர்கள் பட்டியலிள் முதல் இடத்தை பிடித்துள்ளார். #MukeshAmbani
மும்பை:

ஆசிய பணக்காரர்களின் பட்டியலை புளூமபெர்க் வெளியிட்டுள்ளது.

எண்ணை சுத்திகரிப்பு முதல் தொலை தொடர்பு வரை பல்வேறு தொழில்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

அவரது சொத்து மதிப்பு 1.6 சதவீதம் உயர்ந்து சுமார் 3 லட்சம் கோடியாக உள்ளது.

இதன் மூலம் அலிபாபா நிறுவனங்களின் தலைவர் லூக்மானுவை முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளியுள்ளார். லூக்மானுவின் சொத்து மதிப்பு ரூ.2.99 லட்சம் கோடி என்று அலிபாபா நிறுவனம் பட்டியலில் உள்ளது.



பெட்ரோலிய சேமிப்பு திறன் அதிகரிப்பு மற்றும் ஜியோவின் அசுர வளர்ச்சியில் மட்டும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ.27,200 கோடி அதிகரித்துள்ளதாக புளூமபெர்க் தெரிவித்துள்ளது. #MukeshAmbani
Tags:    

Similar News