செய்திகள்

ரெயில் உணவில் வேகாத கோழிக்கறி -ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிவு

Published On 2018-07-01 13:12 GMT   |   Update On 2018-07-01 13:12 GMT
துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளுக்கு வேகாத கோழிக்கறியை பரிமாறிய நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #Undercookedfood #DurontoExpress
கொல்கத்தா:

பூரி-சியால்டா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்றிரவு உணவுடன் வினியோகிக்கப்பட்ட கோழிக்கறி வேகாமல் இருந்ததாகவும், இதை சாப்பிட்ட பயணிகளுக்கு வயிற்று உபாதைகள் ஏற்பட்டதாகவும் தெற்கு மத்திய ரெயில்வே துறையினருக்கு புகார் வந்தது.

அந்த உணவை பரிசோதித்த அதிகாரிகள் அது உண்ணும் தரத்தில் இல்லாதிருப்பதை அறிந்து திடுக்கிட்டனர்.

இதைதொடரந்து, அந்த உணவு உபசரிப்பு (கேட்டரிங்) நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தம் விரைவில் காலாவதியாகும் நிலையில் இந்த ஓப்பந்தம் மறுமுறை புதுப்பிக்க அனுமதி அளிக்கப்படாது என ரெயில்வே உணவு விருந்தோம்பல் துறையின் கிழக்கு மண்டல பொது மேலாளர் டெபஷிஷ் சந்தா இன்று தெரிவித்துள்ளார். #Undercookedfood #DurontoExpress 
Tags:    

Similar News