செய்திகள்

ராஜஸ்தானில் சுரங்கப்பாதையில் விபத்து - உயிரோடு புதைந்து 4 பேர் பலி

Published On 2018-06-30 17:17 IST   |   Update On 2018-06-30 18:38:00 IST
ராஜஸ்தானில் சுரங்கப்பாதையை சுத்தம் செய்யும் போது ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்பூர் :

ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் உள்ள சுரங்கப்பாதையை சரி செய்யும் பணியில் தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொக்லைன் இயந்திரத்தின் அதிர்வு காரணமாக சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் சுரங்கப்பாதையில் பணியில் இருந்த 4 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பேசிய அம்மாவட்ட ஆட்சியர் பாபு லால் மீனா, உயிரிழந்தவர்களுக்கு தனியார் நிறுவனம் உரிய இழப்பீடு வழங்கும் வரை உடல்களை வாங்க உறவினர்கள் மறுப்பதாக தெரிவித்தார்.

இந்த  விபத்து சம்பந்தமாக நிறுவன உரிமையாளர் மற்றும் பொக்லைன் ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News