செய்திகள்

15 வயது சிறுவனை பாலியல் தேவைக்கு பயன்படுத்திய ஆசிரியை சிறையில் அடைப்பு

Published On 2018-05-25 13:43 IST   |   Update On 2018-05-25 13:43:00 IST
அரியானா தலைநகர் சண்டிகரில் தன்னிடம் டியூஷனுக்கு வந்த 15 வயது சிறுவனை பாலியல் தேவைக்கு பயன்படுத்திய ஆசிரியை சிறையில் அடைக்கப்பட்டார்.
சண்டிகர்:

அரியானா தலைநகர் சண்டிகரில் வசிக்கும் 34 வயது பள்ளி ஆசிரியை தன்னிடம் டியூஷனுக்கு வந்த பத்தாம் வகுப்பு சிறுவனை கடந்த இருமாத காலமாக பாலியல் தேவைக்கு பயன்படுத்தியதாக தெரிகிறது.

இதனால், படிப்பில் கவனம் சிதைந்த அந்த 15 வயது மாணவனின் பெற்றோர், அந்த ஆசிரியை சந்தித்து, தங்கள் பிள்ளையை டியூஷனில் இருந்து நிறுத்திவிடப் போவதாக கூறியுள்ளனர்.

இதில், மனமுடைந்த அந்த ஆசிரியை அந்த சிறுவனை தனது வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் வைத்து பூட்டி மறைத்துள்ளார். அக்கம்பக்கத்து வீட்டினர் உதவியுடன் அந்த சிறுவனை மீட்ட பெற்றோர், அந்த ஆசிரியை மீது போலீசில் புகார் அளித்தனர். சிறுவனின் பிரிவை தாங்க முடியாத ஆசிரியை அளவுக்கு அதிகமாக இருமல் மருந்து குடித்து, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவனிடம் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நடத்திய விசாரணையில் அந்த ஆசிரியை அவன் சீரழிக்கப்பட்ட விபரம் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்த ஆசிரியை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் அடைத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News