செய்திகள்

வங்கி மோசடியில் பஞ்சாப் முதல்-மந்திரி மருமகன் மீது சிபிஐ வழக்கு - அமித்ஷா பாய்ச்சல்

Published On 2018-02-26 12:37 GMT   |   Update On 2018-02-26 12:37 GMT
கடுமையாக உழைக்கும் விவசாயிகளின் பணத்தை பாக்கெட் மணியாக பஞ்சாப் முதல்-மந்திரி மருமகன் பயன்படுத்தி உள்ளார் என்று வங்கி மோசடி குறித்து அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் காசியாத்தை சேர்ந்த சிம்போஹோலி சர்க்கரை ஆலை நிறுவனத்துக்கு ஒரியண்டல் வங்கியில் இருந்து ரூ.97.85 கோடி வழங்கியது. இந்த கடனை திருப்பி செலுத்தாமல் அந்த நிறுவனம் மோசடி செய்தது.

இந்த சர்க்கரை ஆலை நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனராக பஞ்சாப் காங்கிரஸ் முதல்- மந்திரி அம்ரீந்தர் சிங்கின் மருமகன் குர்பால்சிங் உள்ளார். இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. குர்பால் சிங் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், சி.பி.ஐ. வழக்குப் பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் தலைவர் அமித்ஷா, 'கடுமையாக உழைக்கும் விவசாயிகளின் பணத்தை பாக்கெட் மணியாக பஞ்சாப் முதல்-மந்திரி மருமகன் பயன்படுத்தி உள்ளார். இதைவிட அவமானம் வேறு இல்லை'. என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். #OBCSCAM #OBCFraud #AmitShah
Tags:    

Similar News