செய்திகள்

துர்கா பூஜை: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

Published On 2017-09-27 14:34 GMT   |   Update On 2017-09-27 14:34 GMT
துர்கா பூஜை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

நாடு முழுவதும் 10 நாட்கள் நடைபெறும் துர்கா பூஜை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் 30-ம் தேதியுடன் விழா நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், துர்கா பூஜையை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

துர்கா பூஜை கொண்டாடும் மக்களின் வாழ்வில் அமைதியும், சந்தோஷமும் நிறைந்திருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
ஒழுக்கத்தை கடைப்பிடித்து தீமைகளை அழிப்பதால் கிடைக்கும் வெற்றியின் அடையாளமாக துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. நமது குடும்பத்தில் உள்ள பெண் குழந்தைகளை நேசிக்க வேண்டும் என்பதையே இந்த விழா உணர்த்துகிறது.

பெண்களின் பங்களிப்பு இல்லாமல் சமுதாயத்தை உருவாக்க முடியாது. ஒவ்வொரு மனிதரின் வெற்றியின் பின்னால் பெண்களின் உண்மையான பங்களிப்பு நிச்சயம் உள்ளது. எனவே இந்த தருணத்தில் நாட்டு மக்களுக்கும் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News